Friday, March 2, 2012

வலையுலகில் நான் புதியவன்

என்னை பற்றி
கனவுகளிற்காய் கடந்த காலங்களை விற்பனையாக்கிக்கொண்டிருப்பவன்..
செல்லாக்காசாகிவிட்ட மானுடத்தின் மறைவு பக்கங்களில்
நிழல் உருவங்களாய் மௌனித்து அலையும் மனிதத்தை,
மகரந்த பொடி உலரா மலர்களின் மெல்லிய இதழ் தொடுத்து
கொக்கியாக்கி இழுத்துவர எத்தனிக்கிறேன்..

மறுத்துவிடுகிறது மனிதம் - ஆனாலும்
சலித்துவிடவில்லை நான்
காரிருளின் அரவணைப்பால் கருவுற்ற பூலோகம்
காலை இளவெயிலை பிரசவிக்கும் தருணத்தில் - அன்று
நள்ளிரவின் நிசப்தத்தில் ஜனனமாகி
தாயின் கதகதப்பில் ஒளிந்திருந்து,
அதிகாலை இளவெயிலின் ஸ்பரிசத்தில் தன்னை புதுப்பித்துகொள்ளும்
ஓர் அணில் குஞ்சை தூதாக அனுப்புகிறேன்

பதிலேதும் இல்லை
முதலிரவின் முன் பொழுதில்
காதலியின் அருகாமையில் , சொர்க்கத்தின் விலாசத்தை
தேடிக்கொண்டிருக்கும் காதலனை 
விலாசத்துடன் அனுப்பிவைக்கிறேன்...

மறுபடி மறுபடி தோற்றுப்போகிறேன்
ஆனாலும் சலித்துப் போய்விடவில்லை நான் 
ஏனென்றால் - ஒவ்வொரு முயற்சியின் போதும்தான்
அதிகாலை வேளையிலேயே பூக்களின் தூக்கம் கலைக்காமல்
மகரந்த பொடிகளால் நுழைந்து அதன் சுகந்தம்
அனுபவிக்க முடிந்தது,
ஒரு அணில் குஞ்சின் முதன் முதம் பூமி அனுபவத்தை
அதன் இதய அறைகளுக்குள் புகுந்து - உணர்வுகள் சிறிது
கடன் வாங்கி  நானும் புசிக்க முடிந்தது...

இருந்த போதும் மனிதத்திடம் நான் தோற்றுவிட்டேனே!!
வாருங்கள் என்னுடன்... தொலைந்த மனிதத்தை இயற்கையின்
படையெடுப்பில் சிறைமீட்டு வருவோம்

16 comments:

  1. வணக்கம் பாரி

    ஆரம்பமே அசத்தலாக கவிதையுடன் வந்திருக்கிறீங்க..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. எனது பதிவுக்கான முதலாவது கருத்துரை தங்களிடமிருந்துதான். மிக்க நன்றி நண்பரே

      Delete
  2. ஒவ்வொரு முயற்சியின் போதும்தான்
    அதிகாலை வேளையிலேயே பூக்களின் தூக்கம் கலைக்காமல்
    மகரந்த பொடிகளால் நுழைந்து அதன் சுகந்தம்
    அனுபவிக்க முடிந்தது,

    மிக அருமையான வரிகள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே

      Delete
  3. ஹாய் பாரி.... வலையுலகுக்கு கவிதையோடு வந்து இருக்கீங்க... :) வாழ்த்துக்கள் பாரி.

    ReplyDelete
  4. பாரி.... உங்க கவிதை என் ரசனை வட்டத்துக்குள் இருக்கு :) எப்போதுமே.... நீ பூ நான் வாசம்... நீ காற்று நான் இலை... இப்படியான மரண கடுப்பு கவிதைகளை பார்த்தாலே எரிச்சல் தான்.... உங்க கவிதை அதில் இருந்து ரெம்ப வித்தியாசப்பட்டு இருக்கு... ஜ லைக் பாரி :) கவிதை எழுதுவதில் ரெம்ப தேர்ச்சி பெற்றவர் போல் இருக்கு.... இது முதல் கவிதை??!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! தொடர்ந்து இப்படியே கலக்குங்க பாஸ்.... வாழ்த்துக்கள் பாரி.

    ReplyDelete
    Replies
    1. அப்படி எல்லாம் இல்லை நண்பா.. இதுதான் எனது முதல் கவிதை..

      என் கவிதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க சந்தோசம்

      Delete
  5. செல்லாக்காசாகிவிட்ட மானுடத்தின் மறைவு பக்கங்களில்..நிழல் உருவங்களாய் மௌனித்து அலையும் மனிதத்தை,மகரந்த பொடி உலரா மலர்களின் மெல்லிய இதழ் தொடுத்து..கொக்கியாக்கி இழுத்துவர எத்தனிக்கிறேன்..//

    ஆரம்ப வரிகள்தான் ஆனாலும் மனசுக்குள் சட்டன ஒட்டிய வரிகள்.... இதில் எவ்ளோ எதார்த்தம் உண்மை :( இதை எழுதியது ஒரு புதிய கவி என்றால் நம்பவா முடியுது :( கவிதையில் ரெம்ப தேர்ச்சி பெற்றவர் எழுதியது போல் இருக்கு..... இன்றைய மனிதத்தை அழகா சொல்லிட்டார் இல்ல..... பாருலே ..... இந்த புள்ள ரெம்ப நல்லா வருவான்:

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி நண்பரே

      Delete
  6. ஒவ்வொரு வரியிலும் உயிர் இருக்கு. ரொம்ப தேர்ந்த கவிஞரோ? கவிதையை அதிகமா நேசிப்பவரால் தான் இப்படியாக ஒவ்வொரு வரிக்கு வரி நிகழ்கால விஷயத்தை ரசிக்கும் விதமாக சொல்ல முடியும். எழுத்துலகில் நல்லதொரு இடத்தை நிச்சயம் பிடிக்க முடியும். அதுவும் கூடியவிரைவிலேயே இது நடக்கும்!

    தான் சொல்ல வரும் விஷயத்தை வெளிப்படையாய் சொல்லாமல் குறிப்பின் மூலம் உணர்த்தி அதன் மூலம் சொல்லாத பல விஷயங்களை சொல்ல வைக்கும் வித்தை உங்கள் எழுத்தில் இருக்கு.

    நிச்சயம் நல்லதொரு இடத்தைபிடிப்பீங்க.


    அடிக்கடி எழுதுங்க

    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திட்டதற்கும் நன்றி சகோதரி

      நான் பெரிய கவிஞன் எல்லாம் கிடையாது.. முதன்முதலாய் கிறுக்கியது.. உங்கள் பாராட்டுக்கு நான் பொருத்தமானவன் தானா?

      மிக்க நன்றி சகோதரி

      Delete
  7. வணக்கம் பாரி, அந்த முல்லைக்கு தேர் கொடுத்த மன்னவன்தானே?
    எங்களுக்கும் வாரி வழங்குங்கள் உங்க பதிவுகளை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா

      என்னாலெயே என்னை நம்மமுடியவில்லை. தங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். தங்களை போன்றவர்களிடம் இருந்து கருத்து பெற்றது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது

      ரொம்ப நன்றி ஐயா

      Delete
  8. வணக்கம் பாரி!

    அறிமுகமே அசத்தலாக கவிதையுடன் வந்திருக்கிறீங்க... வருக வருக!!!!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் காட்டான் சார்

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள்

      Delete